அண்ணாமலைக்கு பதவி.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு : நயினார் நாகேந்திரன் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2025, 11:17 am

சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகை தந்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்க: திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்.. அரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் அடாவடி!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியது, பொள்ளாச்சி கொலை வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை ,கொள்ளை, மது பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விடை இந்த ஆண்டு 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.இதற்கு அடிப்படை காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. முழுக்க முழுக்க தமிழ்நாடு தான் காரணம் என்றார்.

கொடநாடு கொலை வழக்கில் எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். என்பது எங்களது எண்ணம் என தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற பேரணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று நடைபெறும் பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

பாஜக கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். அனைவரும் தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும்.

தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது . தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து பேசுவோம். தமிழ்நாடு முன்னாள் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள் என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!