எங்க ஓட்டு உங்களுக்குத்தான் : கோவை ரஜினி ரசிகர்கள் வைத்த போஸ்டர்!!

1 November 2020, 3:11 pm
Rajini Fans - Updatenews360
Quick Share

கோவை: ரஜினியை அரசியலுக்கு அழைத்து தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரஜினி அரசியலில் இருந்து விலகி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சமீபத்தில் அவரது பெயரிலேயே அறிக்கை ஒன்று வெளியானது.

இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் அது தன்னுடை அறிக்கை அல்ல என்று தெரிவித்தார்.

இருந்த போதிலும், மருத்துவர்கள் அவ்வாறு கூறியது உண்மை தான் என்றும் இது குறித்து தனது மன்ற நிர்வாகிகளுடன் பேசி ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

அரசியலுக்கு கட்டாயம் வருவேன் என்று ரஜினி கூறிக் கொண்டிருந்த வேளையில், அவரிடமிருந்து இப்படி ஒரு பதில் கிடைத்தது ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வியப்புக்குள்ளாக்கியது.

இந்த சூழலில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் சில பகுதிகளில் இந்த போஸ்டர்கள் காணக்கிடைக்கின்றன.

கோவையை பொறுத்தவரையில் டவுன்ஹால் பகுதியில் “மாற்றம் விரும்பும் மக்கள்” என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் “எங்கள் ஓட்டு உங்களுக்குத் தான் நீங்க வாங்க ரஜினி” என்ற வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன.

Views: - 21

0

0