சுவரொட்டிக்கு போட்டா போட்டி : திமுகவினரை ஓட விட்ட பாஜக மகளிரணி!!

21 September 2020, 6:11 pm
Wall Poster Problem- updatenews360
Quick Share

சென்னையில் ஒரு சில பகுதிகளில் ஆளுமைகள் உள்ள கட்சிகள் சுவரொட்டி ஒட்டுவதில் மற்ற தரப்பு கட்சியுடன் பல வருடமாக பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் அடிதடி சம்பவங்களும் கொலை சம்பவங்களும் கூட நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் கூட மெட்ராஸ் திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

இது போலத்தான் சில இடங்களுக்கு ஏற்ப, அந்த பகுதியில் ஆளுமைத் திறன் உள்ள கட்சியினர் சுவரொட்டி ஒட்டுவதில் பிஸ்தாவாக வலம் வந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியில் பிறந்தநாள் விழாவை ஒரு வாரமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் பாஜக மகளிரணி கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதிகளில் உள்ள சுவர்களில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஏற்கனவே திமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டர் மேல் மோடி பிறந்நாள் போஸ்டரை ஒட்டினர்.

இதனையறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு சென்று பாஜக மகளிரணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்குள பிற கட்சியினர் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று வாதிட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பாஜகவை சேர்ந்த பெண்கள் திமுகவினரை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் அறிந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த திமுக நிர்வாக ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த பாஜகவினரும் திமுக நிர்வாகியை தாக்க முயன்றனர். இதையடுத்து திமுக நிர்வாகியை அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்று கேட்டை இழுத்து பூட்டினர்.

இது தொடர்பான காட்சி வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமரசம் பேசிக்கொண்டிருந்த போலீசார் முன்னிலையில் திமுக நிர்வாகி தாக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0