‘சேர்த்தால் உதயம், தவிர்த்தால் அஸ்தமனம்’ : மதுரையில் போஸ்டர்கள்.. மிரண்டு போன ஸ்டாலின்!!

29 January 2021, 6:04 pm
Stalin Azhagiri - Updatenews360
Quick Share

மதுரை : அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை முழுவதும் ‘சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம்’ என திமுகவை மிரட்டும் சுவரொட்டிகள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றன.

திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் அவ்வப்போது ஏதேனும் பரபரப்பை கிளப்பும் வகையில் மு.க அழகிரி திமுகவுக்கு எதிராகவும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.

அண்மையில் அவரது ஆதரவாளர்களை கூட்டி திமுகவுக்கு நேரடியாக சவால் விட்டார். ஜனவரி 30ஆம் தேதி முக அழகிரியின் பிறந்தநாள் என்பதால் மதுரை நகர் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் திமுகவை மிரட்டும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்தி உள்ளனர்.

கட்சியில் தங்களை சேர்ப்பது குறித்து அவர்கள் வெளியிட்ட சுவரொட்டி ஒன்றில் ‘சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம்’ என வாசகங்கள் இடம் பெற செய்துள்ளனர்.

அதேபோன்று திமுக ஆட்சி அமைக்க ஐ -பேக் தேவையில்லை, கருணாநிதியின் மூளையான மு.க அழகிரி மட்டும் போதும் என்று குறிப்பிடும் சுவரொட்டிகளையும் ஒட்டி திமுகவை வம்புக்கு இழுத்துள்ளனர். இந்த சுவரொட்டிகள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Views: - 0

0

0