மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் கனெக்ஷன் : அமைச்சர் தங்கமணி தகவல்..!!

26 November 2020, 1:56 pm
minister thangamani - updatenews360
Quick Share

சென்னை : மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்விநியோகம் சீர்செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் சென்னை, கடலூர், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தகுந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்களை மீட்டது உள்ளிட்டவற்றினால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் மட்டும் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 390 இடங்களில் முன்கூட்டியே மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும், பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்தும் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்விநியோகம் சீர்செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “நிவர் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், பாதிப்புகள் குறைந்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து மின் பணியாளர்கள் வரும் அளவிற்கு சேதம் ஏற்படவில்லை,” என தெரிவித்தார்.

Views: - 20

0

0