பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு : கொரோனா வழிமுறைகளுடன் தொடங்கியது!

16 April 2021, 10:15 am
12th Practical -Updatenews360
Quick Share

பிளஸ் 2 மாணவர்களுக்கான பிராக்டிக்கல் தேர்வு கொரோனா வழிமுறைகளுடன் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்துறைத் தேர்வுகள் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செய்முறைத்தேர்வை ஒன்றரை லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகத்தல் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல வரும் மே 3ஆம் தேதி தொடங்க வேண்டிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் தொடங்கியது. இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது.

Views: - 16

0

0