கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர்; அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!
Author: Prasad14 July 2025, 7:10 pm
திருப்பூர் மாவட்டத்தில் கந்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜெமினி ஜோசஃப். இவரது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் சித்தூர். இவரது மனைவி ரேவதிக்கு 36 வயது. இவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இந்த நிலையில் ரேவதி தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த ஜூலை 6 ஆம் தேதி கோவை-திருப்பதி விரைவு ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தார். அந்த சமயத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய ஹேமராஜ் என்பவர் ரேவதிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.
அப்பெண் அதனை தடுக்கவே அவரை தாக்கிய ஹேமராஜ், அப்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். பலத்த காயம் அடைந்த அப்பெணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இக்கொடூர செயலை செய்த ஹேமராஜ் மீது பாலியல் தொல்லை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று ஹேமராஜ்ஜிற்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
