தங்கை வீட்டில் தங்கிய கர்ப்பணி மனைவி… நலம் விசாரிக்க வந்த கணவன் செய்த செயல்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 3:21 pm
ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை அவரது கணவர் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான சில நாட்களிலேயே இத்தம்பதியினருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், கடந்த ஐந்து மாதங்களாக ஸ்வப்னா தனது திருமணமான தங்கையின் வீட்டில் தங்கி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவிசங்கர், நேற்று மனைவியின் சகோதரி வீட்டிற்குச் சென்று, ஸ்வப்னாவை சமாதானம் செய்வதுபோல் பேசி, தனியாக அழைத்துச் சென்றார்.
பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வப்னாவை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார்.பின்னர், தான் மனைவியை கொலை செய்ததாக ரவிசங்கர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கரை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த ஸ்வப்னாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
