பிரசவத்தின் போது உயிரிழந்த அண்ணி.. பயத்தால் கர்ப்பத்தை கலைக்க முயன்ற நாத்தனார் : ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
28 September 2021, 1:15 pm
Chennai death - updatenews360
Quick Share

சென்னை : பிரசவ பயத்தால் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் உள்கா. இவருக்கு குமாரி கஞ்சக்கா (23) என்ற மனைவி இருந்தார். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில், அண்மையில் குமாரியின் அண்ணி பிரசவத்தின் போது பரிதாபமாக இறந்து விட்டார். ஒடிசாவில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு, கடந்த 19ம் தேதி தான் சென்னை திரும்பியிருந்தார்.

இதனிடையே, திடீரென உடல்நலக்குறைவு காரணமாக குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில், கர்ப்பப் பையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பிரசவத்தின் போது உயிரிழந்த அண்ணியை போன்று, தானும் இறந்து விடுவோமோ..? என்ற அச்சத்தில், கர்ப்பத்தை கலைக்க நாட்டு மருந்தை குமாரி எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. கணவனுக்கே தெரியாமல் நண்பரின் உதவியுடன் அவர் இந்த வேலையை செய்துள்ளார்.

பிரசவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத பெண்களுக்கு, உரிய விழிப்புணர்வு கொடுக்காமல், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் தற்போது இரு உயிர் பிரிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 127

0

0