கூட்டணிக்கு ‘துண்டு’? பிரதமர் மோடிக்கு திடீர் புகழாரம் சூட்டும் பிரேமலதா!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2025, 4:53 pm

பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா அளித்த பேட்டியில், கேப்டன் பலருடைனய அன்பை பெற்ற ஒரு மனிதர், சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ஒரு ஆளுமையாக இருந்தார்.

இதையும் படியுங்க: மாநிலங்களவையில் ஒலிக்கும் கமல்ஹாசன் குரல்.. தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!

விஜயகாந்திற்கும் பிரதமர் மோடிக்கு இருக்கும் உறவு அரசியலை தாண்டிய ஒன்று என்றும், தமிழகத்தின் சிங்கம் என்று கேப்டனை பிரதமர் மோடி அழைப்பார் என்றும் கூறினார்.

கேப்டன் உடல்நலம் குன்றி இருந்த போது, அடிக்கடி பிரதமர் மோடி தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும், மோடி – கேப்டன் இடையேயான நம்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.

Premalatha suddenly praises Prime Minister Modi

தேமுதிக கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருந்தது. அதிமுக தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஒரு வேளை அதிமுக தயவில்லாமல் பாஜக கூட்டணியில் நேரடியாக இணைய பிரேமலதா பிளான் போட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!