எனக்கு அந்த நடிகருனா அவ்ளோ இஷ்டம்…. அழகான மனச வாரி வழங்கி
பிரஸ்மீட்டில் பேட்டி கொடுத்த திவ்யபாரதி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 6:05 pm
Divyabharathi - Updatenews360
Quick Share

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பு மற்றும் ஆடை வடிவமைப்பு ஃபேஷன் துறை சார்பில் ஃஎப் சேரிஸ் ஃபெஸ்டிவல் நடைபெற்றது.

இதில் குறும்படப் போட்டி, ஃபேஷன் ஷோ போட்டோகிராபி டிரீம், கேட்சர் மேக்கிங், மெஹந்தி, ட்ராயிங் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.கல்லூரி மாணவர்களால் அரங்கேறிய ஆடை அலங்கார அணிவகுப்பில் லண்டன்,பாரிஸ் போன்ற நகரங்களில் நடப்பது போன்ற அரங்க அமைப்புடன் பல்வேறு நவ நாகரீக உடைகளுடன் மாணவ மாணவியர் அணிவகுப்பு நடத்தியது காண்போர் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கபட்ட இந்த துறையில் முயற்சிகளை முன்னெடுத்து பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் தனக்கு நடிகர் தனுஷ் உடன் நடிக்க மிகவும் ஆசை உள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபல நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 927

    0

    0