குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணிக்கும் குடியரசுத் தலைவர் : குடும்பத்துடன் முதுமலை செல்ல உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran
4 August 2021, 10:49 am
Ramnath Kovind Ooty- Updatenews360
Quick Share

நீலகிரி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலை ரயிலில் பயணிக்க வாய்ப்புள்ளதால், குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ள மலை ரயில் தயார்ப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் நேற்று உதகைக்கு வந்தார். இவர் மூன்று நாட்கள் தங்கி ஓய்வு எடுக்கிறார். மேலும், இன்று குன்னூர் வெலிங்கடன் ராணுவ மையத்தில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்.

இது தவிர உதகையில் உள்ள சில சுற்றுலா தலங்கள் மற்றும் முதுமலைக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மலை ரயிலிலும் பயணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குன்னூரில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலை ரயிலை சீரமைப்பு மற்றும் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இவர் உதகை தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, இரு பேட்டரி கார்கள் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், உதகை அருகேயுள்ள பைக்காரா படகு இல்லமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பைக்காரா செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முதுமலை புலிகள் காப்பகம் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகளும் ஜனாதிபதியை வரவேற்கவும், காப்பகத்தை சுற்றி காட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

Views: - 179

0

0