அறிஞர் அண்ணா வழியில் பிரதமர் மோடி… உதயநிதியின் தலைக்கான விலை சரிதான் : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 11:55 am

அறிஞர் அண்ணா வழியில் பிரதமர் மோடி… உதயநிதியின் தலைக்கான விலை சரிதான் : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்!!

இந்தியா என்ற பெயரை பாரத் (Bharat) என்று மாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்று பெயர்ப் பலகைக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்;- பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன்.

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என மாற்ற முடிவு செய்வதும் சரியானதுதான். முதலமைச்சருக்கு கொடுப்பதுபோல், ஆளுநருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இதை தமிழக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் மரபு.

சனாதனம் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. அது இந்து மதத்தின் ஒரு அங்கம். இந்து மதத்தில் காலத்தின் அடிப்படையில் தோன்றிய சாதிகள் பல்வேறு சமூக வெறுப்புகளை உருவாக்கியது என்பதை மறுக்க இயலாது. ஆனாலும் இந்து மதம் அதனை போதிக்கவில்லை. எல்லோரையும் சமமாக தான் நடத்த வேண்டும் எனக் கூறுகிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!