அரசு மருத்துவமனையில் காதலியுடன் உல்லாசமாக இருந்த கைதி.. வீடியோ வெளியானதால் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2025, 4:29 pm
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், மதுக்கடை மேலாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றவர்.
2010 முதல் நெல்லூர் மத்திய சிறையில் கைதியாக உள்ள இவர், 2014 பிப்ரவரி 12 அன்று சிறையில் இருந்து தப்பியவர். இருப்பினும், 2018 நவம்பர் மாதம் மீண்டும் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில், ஸ்ரீகாந்த் பரோலுக்கு விண்ணப்பித்தார். ஆனால், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) மற்றும் நெல்லூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர், அவர் வெளியே வந்தால் கடுமையான குற்றங்களைச் செய்யக்கூடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அவரது பரோல் மனு நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில், நெல்லூர் மாவட்ட சிறை அதிகாரிகளால் ஸ்ரீகாந்த் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், காவல் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும்போது, ஒரு இருசக்கர வாகனம் மோதியதில் அவரது கை உடைந்தது. இதையடுத்து, அவர் மீண்டும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விதிமுறைகளின்படி யாரும் ஸ்ரீகாந்தை சந்திக்கக் கூடாது என்பது காவல்துறையின் பொறுப்பாகும். ஆனால், இந்த நேரத்தில் ஸ்ரீகாந்த் தனது காதலியான அருணாவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஸ்ரீகாந்த் சிறையில் இருக்கும்போது, அவரது காதலி அருணா அவரது ரவுடி கும்பலை கவனித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சில தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் துணையுடன் ஸ்ரீகாந்துக்கு பரோல் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அரசு அவரது பரோலை ரத்து செய்தது.ஸ்ரீகாந்த் மீண்டும் நெல்லூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அருணாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வைரலானது, காவல்துறை மற்றும் சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
