ஊராட்சிமன்ற தலைவரை தாக்கிய தனியார் பேருந்து ஒட்டுனர் கைது

27 November 2020, 11:09 pm
Quick Share

அரியலூர்; கீழப்பழூர் ஊராட்சிமன்ற தலைவரை தாக்கிய தனியார் பேருந்து ஒட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டபட்டது. இந்நிலையில் ஏராளமான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் நேராக சென்றுள்ளன. இதற்காக ஊராட்சிமன்ற தலைவர் மருதமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் அவ்வபோது வலியுறுத்தியதையடுத்து பேருந்துகள் உள்ளே சென்று வந்தன. இந்நிலையில் இன்று தஞ்சாவூரிலிருந்து சென்ற பேருந்து பேருந்து நிலையத்தின் வெளியே பயணிகளை இறக்கி விட்டுள்ளது.

இதனை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கேட்டதற்கு பேருந்து நிலையத்திற்குள் வரமுடியாது என ஒட்டுனர் கூறியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் பயணம் செய்த தனியார் பேருந்து ஒட்டுனர் குமார் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய ஒட்டுனர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0