சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : குழந்தைகள் உட்பட பலர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 2:15 pm
Priavate Bus Accident -Updatenews360
Quick Share

திருவாரூர் : தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அருகே கீழ பனங்குடி கிராமத்தில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி 25 பேருடன் சென்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்கால் மதகில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த லட்சுமி (வயது 40) , ஹரிஷ் (வயது 11) அவரது சகோதரர் ரித்தீஷ் (வயது 5 ), ஜெயா (வயது 52) மன்னார்குடியை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இவர்களை போலீசார் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கிருஷ்ணராஜ் மற்றும் நடத்துனர் ராகுல் இருவரிடமும் நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 210

0

0