முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்த திமுகவினர்.. வெறிச்சோடிய பேருந்துநிலையம்… பயணிகள் அவதி…!

Author: Babu Lakshmanan
2 July 2022, 9:52 am
Quick Share

கரூரில் முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்சி நிர்வாகிகளை ஊர், ஊராக அழைத்து செல்ல தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டதால், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கரூர் மாநகருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று இரவு கரூருக்கு வருகை தந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய பகுதிகளில் ஓடி வந்த தனியார் பேருந்துகள், தனியார் கல்லூரி பேருந்துகள், பள்ளி பேருந்துகள் என்று பலதரப்பட்ட பேருந்துகள் கட்சி நிர்வாகிகளை அழைத்து செல்வதற்காக சென்றது.

இதனால், கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகள் ஏதும் இல்லை. மேலும், சில குறிப்பிட்ட ஊர்களுக்கு தனியார் பேருந்துகளின் சேவையும் முக்கிய பங்களிப்பதால், தற்போது அந்தப் பேருந்து சேவை இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இது மட்டுமில்லாமல், அந்த தனியார் பேருந்துகளுக்கு மாற்றாக, மாற்று ஏற்பாடாக பேருந்துகள் ஏதும் மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில், பேருந்துகள் கிடைக்காமல், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

ஒரு சில டவுன் பஸ்களில் பயணிகள் தொங்கிய படியே, பயணிகள் பயணித்தனர். முதல்வர் கரூர் வந்ததையடுத்து எங்களுக்கு இந்த நிலையா ? என்று முனுமுனுத்தபடி, பேருந்தில் பயணிகள் பயணித்தனர்.

Views: - 195

0

0