அண்ணாமலைக்கு சிக்கல் மேல் சிக்கல்.. குவியும் அவதூறு புகார் : அதிமுகவினர் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 12:01 pm

அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

அதில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக அதிமுகவையும் பொதுச் செயலாளரையும் தரை குறைவாக பேசி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.

அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறுப்பிட்டுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?