காவல்துறையுடன் இணைந்து தொழில் படையினர் அணிவகுப்பு : அச்சமின்றி வாக்களிப்பது குறித்து ஊர்வலம்!!!

2 March 2021, 8:07 pm
Sathy March -Updatenews360
Quick Share

ஈரோடு : வருகிற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் நெருங்குவதை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பொன்குமார் தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

முன்னதாக சத்தியமங்கலம்‌ எஸ்ஆர்டி கார்னரில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பொன் குமார், சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது பேருந்துநிலையம், எஸ்.பி.எஸ் கார்னர், வட்டாட்சியர் அலுவலகம், ஆற்றுப்பாலம், அத்தாணி ரோடு, வடக்குப்பேட்டை வழியாக சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் சத்தியமங்கலம் உட்கோட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல்துறையினர், மகளிர் காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Views: - 6

0

0