கோரிக்கைகளை நிறைவேற்றிய வலியுறுத்தல்: பி.எஸ்.ஜி கல்லூரியில் பேராசிரியர்கள் தர்ணா..!!

Author: Rajesh
2 March 2022, 9:58 pm
Quick Share

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பீளமேடு விமானநிலையம் அருகே பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் அரசு உதவி பெறும் பாடத்திட்டத்தின் கீழ் பணி புரியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கல்லூரி வளாகத்தில் இன்று திடீர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்லூரியில் காலியாக உள்ள 7O ஆசிரியர் பணியிடங்கள், 42 அலுவலக பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புதல், உயர் கல்வி தனியார் மயமாவதை தடுத்தல், பணி இடத்தை குறைக்கும் நடவடிக்கைகளை கைவிடுதல் மற்றும் கல்லூரி முதல்வர் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Views: - 356

0

0