குழந்தைனு கூட பாக்காம .. சும்மா விடக்கூடாது; பாலியல் வன்கொடுமை செய்த கட்சி நிர்வாகி..!

Author: Vignesh
19 August 2024, 12:10 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது போலீசாரிடமிருந்து தப்ப முயற்சி செய்துள்ளார்.

போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற பொழுது தடுமாறி விழுந்த சிவராமன் வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமல்லாமல் என்சிசி முகாம் என்ற பெயரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!