RED LIGHT AREA போல் மாறிய அடுக்குமாடி குடியிருப்பு.. ரகசிய சோதனையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 12:55 pm

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான கீதா சர்வீஸ் அபார்ட்மெண்ட் செயல்பட்டு வருகின்றது.

இந்த அப்பார்ட்மெண்டில், பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தி வருவதாக சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் லதா தலமையிலான காவல்துறையினர் கீதா சர்வீஸ் அபார்ட் மெண்டிற்கு நேரில் சென்று அப்பார்ட்மெண்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அங்கு அடுத்தடுத்து நான்கு அறைகளில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்து, அப்பெண்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதையும் படியுங்க: இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் திருத்தணியை சேர்ந்த கோவிந்தன், அடுக்கம்பாறையை சேர்ந்த விஜய், சேன்பாக்கத்தைச் சேர்ந்த அனிஷ், மற்றும் சித்தூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல பெண்களை விபச்சாரத்தை ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

Prostitution 3 Arrest in Vellore

அடுத்த கட்டமாக எந்தெந்த இடங்களில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!