அன்புமணி ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் சாலை மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2023, 4:13 pm
NLC Salaimariyal - Updatenews360
Quick Share

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை புறவழிச் சாலையில் திண்டிவனம் நகர பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர்.

மேலும் திண்டிவனத்தில் பரபரப்பான சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் குவிந்துள்ளால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் ஆங்காங்கே பாமகவினர் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Views: - 408

0

0