‘இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வாங்கி கொடுத்தது பெருமையாக உள்ளது‘ : மாரியப்பனின் தாய் நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2021, 3:52 pm
Mariappan Mother - Updatenews360
Quick Share

சேலம் : பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தது இந்தியாவிற்கு பெருமையாக உள்ளதாக மாரியப்பன் குடும்பத்தினர்,கிராமத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி யைச் சேர்ந்த மாரியப்பன் பங்கேற்றார்.

கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருந்ததால் நேற்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

பெரியவடகம்பட்டியிலுள்ள அவரது வீட்டில் அவரது தாயார் சரோஜா, தம்பிகள் குமார், கோபி மற்றும் நண்பர்கள் தொலைக்காட்சியை நேரலையில் கண்டுகளித்தனர். தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் வென்றார்.
இதனை நேரில் கண்ணுற்ற அவரது தாயார் சரோஜா மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருடைய சகோதரர்களும் நண்பர்களும் உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர்.

Views: - 257

0

0