டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு.. விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி : திணறிய மதுரை!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 2:14 pm

டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து, முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம், கிராம பொதுமக்கள் சார்பில் மேலூரிலிருந்து மதுரை மாநகரில் அமைந்துள்ள தமுக்கம் தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக வருகை தந்து போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையும் படியுங்க: வீண் போராட்டம்.. நாடகப் போராட்டம்.. அதிமுக, பாஜக கடும் விமர்சனம்!

தொடர்ந்து, ராஜா முத்தையா மன்றம், மாநகராட்சி நீச்சல் தொட்டி, காந்தி அருங்காட்சியம் மற்றும் ராஜாஜி பூங்கா வழியாக தமுக்கம் வரை 4 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Madurai Tungsten Protest

மேலும், பேரணியில் ஈடுபடும் நபர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்களும் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களுடன் வருகை தருபவர்களை கையாளுவதற்காக தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் போலீசார் உள்ளனர்.

ராஜா முத்தையா மன்றம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அதேபோல் தமுக்கம் செல்லும் சாலை முற்றிலுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போக்குவரத்து பாதிப்பு. இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் அணிவகுத்து காணப்படுகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!