சென்னையில் தொடர் மழை…சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி…!

8 November 2020, 10:58 am
chennai rain 1 - updatenews360
Quick Share

சென்னை: சென்னையின் பல இடங்களில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

rain tn - updatenews360

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் அதிகாலை முதலே நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், விமான நிலையம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, வடபழனி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

மேலும், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், ஆவடி, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

Views: - 22

0

0