அரசு அனுமதியளித்தும் ஆர்வமில்லாத மக்கள்… ஆள் யாரும் வராததால் திறக்கப்படாத திரையரங்குகள்…!!!
Author: Babu Lakshmanan23 August 2021, 2:46 pm
கரூர் : கரூர் மாவட்டம் திரையரங்குகள் தயார் நிலையில் இருந்த போதும் திரைப்படங்கள் எதுவும் வராததால் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை.
கொரோனா தளர்விற்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் 50% இருக்கைகளுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நகரில் உள்ள 9 திரையரங்குகள், குளித்தலையில் உள்ள 3 திரையரங்குகள், காவல்காரன்பட்டியில் உள்ள 1 திரையரங்கு என 13 திரையரங்கங்கள் நேற்று சுத்தம் செய்யும் பணிகளும், மின்னனு இயந்திரங்கள் இயக்கியும் பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
நேற்று மாலையில் எந்த எந்த திரையரங்குகளில் என்னனென்ன திரைப்படங்கள் திரைப்படும் என்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விநியோகஸ்தர்கள் திரைப்படங்கள் திரையிடப்படுவது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாததால் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் இறுதி செய்யப்பட்டு திரைப்படங்கள் திரையிட வாய்ப்பு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
0
0