விவசாய நிலம் அழிந்தால் பரவாலையா? டோல் பிளாசா அமைப்பதற்கு எதிர்ப்பு : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பரபரப்பு கடிதம்..!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 4:08 pm
Public Letter to CM - Updatenews360
Quick Share

கோவை- பொள்ளச்சி நெடுஞ்சாலையில் டோல் பிளாசா வேண்டாம் என முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

2016ம் ஆண்டு கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளும், டோல் பிளாசா அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் சம்மதித்த நிலையில் டோல் பிளாசாவிற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டோல் பிளாசா வந்தால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் கூறி டோல் பிளாசா நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர். இந்த கடிதத்தின் நகலை கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்குவதற்கு வந்திருந்தனர்.

டோல் பிரச்சனை குறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரியபடுத்தி உள்ளதாக கூறிய அவர்கள் அங்கு டோல் பிளாசா அமைந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த டோல் பிளாசா கோவை மாநகராட்சிக்கு 8 கிமீ தொலைவிலேயே அமைய உள்ளது சட்ட விதிமுறைக்களை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 468

0

0