புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

9 May 2021, 10:04 pm
NR congress rangasamy - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க மற்றும் அ,தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்தன. இதில் ரங்கசாமி கட்சி 20 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து முதல்வராக ரெங்கசாமி பணியாற்ற துவங்கினார்.இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார். அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டு கொண்டார்.

Views: - 156

0

0