புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க தடை : முதலமைச்சர் நாராயணசாமி!

20 August 2020, 5:45 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி : விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் தற்போது 1796 பேர் கொரானா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறினார்.

தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும், பல்வேறு மருத்துவமனைகளில் 300க்கும் மேற்பட்ட படுகைகள் வழங்கிய நிலையில் அரியூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி படுக்கைகள் வழங்க மறுத்ததால் பேரிடர் மீட்பு துறை சார்பாக மருத்துவமனை எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு உத்தரவுபடி புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ம‌க்க‌ள் வீடுகளில் சிலையை வைத்து கொண்டாட வேண்டும். அரசோடு ஒத்துழைக்காத மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்தும் முதல்வர் நாராயணசாமி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Views: - 36

0

0