புதுச்சேரியில் ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு : கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Author: kavin kumar
8 January 2022, 6:38 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜன.19 ஆம் தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளின் நிலைப்பாடுகள் குறித்து பெற்றோர்களுடன் இன்று பல்வேறு பள்ளிகளில் கல்வித்துறையினர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பெற்றோர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்தார் இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறந்து வைக்க வலியுறுத்தினர்.

கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் பள்ளிகளை தொடர்ந்து திறந்து வைத்து இருப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கட்டத்தில் பெருப்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வலியுறுத்தியதாகவும், ஜன.19 ஆம் தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் முதல்முறையாக திருப்புதல் தேர்வுக்காக கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல் கொரோனா தொற்றின் சூழ் நிலைக்கு ஏற்ப பள்ளிகள் மூடப்படுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்த பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Views: - 397

0

0