புதுச்சேரியில் வரும் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு : இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி!!

27 September 2020, 5:16 pm
Pondy School Open- Updatenews360
Quick Share

புதுச்சேரி : வரும் 5ந்தேதி முதல் புதுச்சேரியில் முதல்கட்டமாக 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் அசுவின் குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் இந்த கூட்டத்தின் முடிவில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முதற்கட்டமாக, பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது மானவ மானவிகளுக்கு வரும் அக்டோபர் 5ந்தேதி தொடங்கவும், அதேபோல் 9, 11ம் வகுப்பு மானவ மானவிகளுக்கு வரும் 12ந்தேதி பள்ளிகள் தொடங்வும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இவர்களுக்கான போக்குவரத்து வசதி, மதிய உணவு உறுதி செய்யப்பட வேண்டும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் தற்போதையக்கு திறக்கப்படாது. அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, சமூக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் பெற்றோர்களின் கையொப்ப உறுதி பெற்ற பிறகே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அவ்வாறு பள்ளி வரும் மானவ செல்வங்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யும்போது ஏதேனுக் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் சிறப்பு கண்காணிப்பாளர்கள் மூலம் கண்கானிக்கவும், இந்த கூட்டத்தின்போது உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 1

0

0