புதுச்சேரியை மிரட்டிய புயல் : கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!!

26 November 2020, 9:42 am
Pondy Leave - Updatenews360
Quick Share

தமிழகத்தை மிரட்டி தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. அதி தீவிரப் புயலாக இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வரகிறது.

இதையடுத்து புதுச்சேரி மற்றும காரைக்காலில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கரையை கடந்தாலும் மழை தொடர்ந்த பெய்து வருவதால் கனமழை வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளம், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 0

0

0