“ஆஞ்சநேயர் சிலையை துண்டு துண்டாக உடைத்துச் சென்ற மர்ம நபர்கள்!”-கொந்தளித்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர்!

Author:
23 June 2024, 3:13 pm

புதுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் சிலை மர்ம நபர்களால் உடைப்பு-இந்து அமைப்பினர் கொந்தளிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி விவசாயி ஒருவர் தன்னுடைய முந்திரி விலை நிலத்தை குரங்குகள் சேதப்படுத்துவதாக கூறி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 53 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்றார்.அப்போது இந்து அமைப்புகளால் இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்த நிலையில் 53 குரங்குகளையும்புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அருகே சாலை ஓரத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் சிறிய ஆஞ்சநேயர் கோயிலை இந்து அமைப்பினர் கட்டினர்.திருச்சி,தஞ்சை சாலை வழியாக செல்வோர் இதில் வழிபட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில் இன்று காலை அந்த சிலை உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட இந்து அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஞ்சநேயர் சிலையின் கை, வால் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேதப்படுத்தி, துண்டு துண்டாக உடைத்து, அதன் அருகிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஒரு வார காலத்திற்குள் அந்த இடத்தில் மீண்டும் கோயிலை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும்,குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் இந்து அமைப்புகள், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஒன்றாக இணைந்து கடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காவல்துறையிடம் எச்சரித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் துறை தான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • surya vijay sethupathi movie phoenix twitter review படத்தை பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது? பீனிக்ஸ் படத்தை கண்டபடி கிழிக்கும் ரசிகர்கள்!