“களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்-அடேங்கப்பா, பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?”

Author:
25 June 2024, 2:31 pm

குருந்துடைய அய்யனார் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 42-வது ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் .
அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தில் உள்ள குருந்துடைய அய்யனார் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 42 -வது ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு,கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு,தேன்சிட்டு மாடு என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, மதுரை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 140 க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரூ.3,98,000 ரொக்கப்பரிசும், கோப்கைகளும் வழங்கப்பட்டது.பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ரசிகர்கள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!