“தேர் இழுக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!-தமிழகத்தில் தொடரும் சோகம்!”

Author:
24 June 2024, 6:57 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் தேரின் மேலே கும்பம் ஏற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கயிறு அறுந்து கும்பத்துடன் தேர் சாய்ந்து ஒருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள மாத்தூர் ராமசாமி புரத்தில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது .இந்த கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று மாலை விமர்சையாக நடைபெற இருந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேரை அலங்கரிக்கும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்தன.
அப்போது தேரின் கும்பத்தை மேலே ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறுந்து தேர் சாய்ந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது விழுந்தது. அதில் அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அந்த கிராம மக்கள் மீட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு சென்ற போது மகாலிங்கம் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். எஞ்சிய 4 பேருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் தேரில் வடம் அறுந்து போனதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். அதன் பின்பு பல்வேறு முயற்சிக்குப் பிறகு தேர் இழுக்கப்பட்டது. இதே போல் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் பிரகதாம்பாள் ஆலயத்தின் தேர் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர். இது போன்ற தேர் விபத்துக்கள் சமீப காலமாக அடிக்கடி நிகழ்வதால் திமுக ஆட்சியின் அறநிலையத்துறை சரியாக செயல்படவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.குறிப்பாக தேர் இழுப்பதற்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரிகள் தேரினை சரியாக ஆய்வு செய்திருந்தால் இது போன்ற விபத்துக்கள் தடுக்கப்பட்டிருக்கும் இதற்கு காரணம் திமுக வின் அலட்சியம் தான் என்று பலரால் கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!