கள்ளக்குறிச்சி விவகாரம் விக்ரவாண்டி தேர்தலில் எதிரொலிப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தான் சந்தேகமாக உள்ளது!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டி!
புதுக்கோட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக சட்டசபை தேர்தலின் போது கண்டைனரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் யாருடையது என்று சிபிஐ யால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது போன்ற பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணை தொய்வு நிலையிலேயே உள்ளது.ஆனால் சிபிசிஐடி விசாரணை வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை செய்யச் சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை கிடையாது. சிபிசிஐடி விசாரணையிலேயே உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்.சிபிஐ விசாரணை வேண்டும் என்று அண்ணாமலை கேட்பதற்கான நோக்கத்தைப் பார்த்தால் இந்த விவகாரத்தில் அண்ணாமலை தான் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் தான் சிபிஐ விசாரணை தேவை என்று அண்ணாமலையும் கூறுகிறார்.
சட்டசபையில் விவாதிப்பதற்கு நாங்கள் தயார். நீங்கள் வாங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் கூறினார். ஆனால் அவர்கள் வரவில்லை. எங்களுக்கு ” மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை”!.
நடத்தக் கூடாதது நடந்து விட்டது. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய சதியில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது விரைவில் சிபிசிஐடி விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
தமிழக முதல்வர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? கடந்த காலங்களில் மகா மகாத்தின் போது பலர் இறந்தனர்.அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? எடப்பாடி காலத்திலேயே கள்ளச்சாராயத்தால் பலர் இறந்தனர். அப்போது எடப்பாடி ராஜினாமா செய்தாரா ?இதெல்லாம் அரசியலுக்காக எடப்பாடி பேசி வருகிறார்.மெத்தனால் வந்தது பாண்டிச்சேரியில் இருந்து என்று விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆகையால் பாண்டிச்சேரி முதல்வர் தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லக் கூட எடப்பாடிக்கு தைரியம் இல்லையே!
நீட் தேர்வு முறைகள் தொடர்பாக நீதிமன்றம் பார்த்துக் கொண்டுள்ளது.நிச்சயம் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும்.விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது போன்று நடப்பது என்பது அரசியல் காரணம் இருக்குமா? என்ற காரணத்தையும் பார்க்க வேண்டி உள்ளது.இந்த விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்காது.
பிரச்சாரத்தின் போது இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து எடுத்துக் கூறுவோம்முதல்வருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட சட்டமன்றத்திற்கு வந்து இதுகுறித்து விவாதம் செய்ய தயார் என்று எதிர்க்கட்சிக்கு முதல்வர் கூறினார். இதுபோன்று எந்த முதல்வர் கூறுவார்?தற்போதைய முதல்வர் போல் வேறு யாரும் இருக்க முடியாது.கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியர் நடந்தது கள்ளச்சாராயம் சாவு இல்லை என்று எதனால் கூறினார் என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பேசினார்.
0
0