சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

6 May 2021, 3:16 pm
Child Harrassment - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை: மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குற்றவாளியான தந்தைக்கு மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தென்ந்திரையான்பட்டியில், வசித்து வந்தவர் முருகேசன். 2019-ல் மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக முருகேசன் மீது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்தாக குற்றவாளி முருகேசனுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும், ரூ.3 லட்சம் அபராதம், ஒரு ஆயுள்தண்டனை, 7 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் மரணதண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Views: - 142

0

0