சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

Author: kavin kumar
17 August 2021, 11:38 pm
Quick Share

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த 23 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதி அருகே உள்ள தெற்கு வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரும் விராலிமலையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் திருச்சி மாவட்டம் நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 8ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெங்கடேசன் அந்த சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.இதனையடுத்து 16 வயது சிறுமியை அழைத்து வந்து குடும்பம் நடத்திய வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீட்க்கப்பட்ட சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைப்பதா அல்லது காப்பகத்தில் சேர்ப்பதா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Views: - 274

0

0