அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா! அரசு மருத்துவமனையில் அனுமதி!!
20 August 2020, 2:46 pmபுதுக்கோட்டை : கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ஓரளவு தொற்று குறைந்து வந்தாலும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 4 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தது குறிப்பிடதக்கது.