ஊராட்சி தலைவருடன் பெண் வி.ஏ.ஓ. உல்லாசம்!! வீட்டுக்கு பூட்டு போட்ட புருசன்.. பிறகு நடந்த ‘ஷாக்’..!
3 August 2020, 7:25 pmசிவகங்கை : ஊராட்சி மன்ற தலைவருடன் உல்லாசமாக இருந்த பெண் வி.ஏ.ஓ.வை அவரது கணவன் கையும், களவுமாக பிடித்த சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவட்டத்தின் சொக்கநாதன்புத்தூர் கிராமத்தின் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருபவர் வித்யா. அதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களின் பழக்கம் அரசல்புரசலாக அக்கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வழக்கம் போல, ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் வீட்டிற்கு வி.ஏ.ஓ. வித்யா சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த வித்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கண்ணனின் வீட்டிற்கு சென்று வெளிப்பக்கம் கதவை பூட்டி சிறைபிடித்தனர்,
இதையறிந்த பொதுமக்களும் அங்கு திரண்டனர். பின்னர், இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். பொதுமக்கள் மற்றும் வித்யாவின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்போது, இது தொடர்பாக சட்டப்படி, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டிய ஊராட்சிமன்ற தலைவரும், கிராம நிர்வாக அலுவலரும் தனிவீட்டில் தனிமையில் இருந்த சம்பவம் அப்பகுதி அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.