கொடுக்கல் வாங்கல் பிரச்சனை : சொல்போன் கடை உரிமையாளரை தாக்கிய இளைஞர்!! பகீர் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2021, 3:49 pm
Attack - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடுக்கல் வாங்கல் தகராறில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய ஊழியரை துரத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் யூசுப்நகரைச் சேர்ந்த திருப்பதி. இவர் வடமதுரை ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரிடம் வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டு செல்போன் வாங்கிவிட்டு பாக்கி பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திருப்பதி தனது கடையில் இருந்தபோது தனது நண்பர்களுடன் அங்கு வந்த கார்த்தி தனது செல்போனிற்கு ரீசார்ஜ் செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு திருப்பதி, பழைய பாக்கியை தராமல் ரீசார்ஜ் செய்யமுடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி திருப்பதியை தாக்கியும் தகாத வார்த்தைகளை கூறியும் கொலைமிரட்டல் விடுத்து கடை ஊழியர்களை வெளியே விரட்டியுள்ளார். அந்த காட்சிகள் கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு வேடசந்தூர் அனைத்து வர்த்தக சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர் திருப்பதி வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Views: - 187

0

0