‘நீங்க தர்ர ரூ.1,000 வாங்கித்தான் பொங்கல் கொண்டாடனுமா’..? கிருஷ்ணசாமி விளாசல்!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 6:19 pm

சுதந்திரம் பெற்று 70 வருடம் ஆன பிறகும் 1,000 ரூபாய் பெற்று தான் பொங்கல் வைக்க வேண்டுமா என்ற நிலையில், கரும்பு கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி சார்பாக மக்களுடன் பொங்கல் திருவிழா கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது:- புதிய தமிழகம் கட்சி சார்பாக பொங்கல் திருநாளை ஒருமைப்பாடு திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்து இலவச, வெட்டி சேலை வழங்கப்படுகிறது.

முக்கிய நோக்கம் ஜாதி, மத, மொழி, இன வெறுபாடுன்றி அடையாளமின்றி பொங்கல் திருநாள் கொண்டாட வேண்டும். தமிழக அரசு வேட்டி, சேலை கொடுக்கவில்லை. அதற்கு பதில் நாங்கள் புதிய தமிழகம் கட்சியினர் கொடுக்கிறோம். ஆளுநர் திறமையாக இந்தியராக செயல்பட்டு வருகிறார்.

சட்டமன்றம் என்றால் கார சார விவாதம் நடைபெறும். தமிழகம், வளர்ச்சி தான் முக்கியமே தவிர, (எடு) பூனை கருப்பா, வெள்ளையா என்பது முக்கியம் அல்ல, எலி பிடிக்கிறதா என்பது தான் முக்கியம்.

சுதந்திரம் பெற்று 70 வருடம் பெற்ற பிறகும், 1,000 ரூபாய் பெற்று தான் பொங்கல் வைக்க வேண்டுமா என்ற நிலையில், கரும்பு கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இலவச வெட்டி, சேலை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். கடந்த 1 1/2 ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

முன்னர், அடைந்தால் திராவிட நாடு என சொன்னார்கள். இப்போது திராவிட மாடல் என சொல்கின்றனர். ஆளுநர் ஒரு ஒரு கருத்து தானே சொன்னார். அவர், தமிழகத்தின் முதல் குடிமகன் அவரை வீட்டிற்கு அழைத்து அவமானப்படுத்த வேண்டுமா? விவேகானந்தர் பிறந்த நாள் இளைஞர்கள் எழுச்சி நாளாக இருக்க வேண்டும்.

தமிழகம் ஏற்கனவே மதுவால் சீரழிந்து இருக்கிறது. வன்மை, ஆபாசம் இருக்க கூடாது என தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்தி வருகிறோம். பள்ளி, கல்லுரிகளில் போதை வஸ்துகள் வருத்தம் அடைய செய்கிறது. மது, கஞ்சா அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழக அரசு, காவல்துறை மீட்டெடுக்க வேண்டும், என கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?