தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன்ட் மூவிஸை சுற்றியே உள்ளது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 1:11 pm

திமுக ஆட்சியில் திரையுலகம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அழிவு பாதையை நோக்கி செல்கின்றது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை பார்த்தால் இலங்கை-யை போல் மாறும் சூழ்நிலை உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில் திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் என்றார்.

அதிமுக-வின் கடந்த 5-ஆண்டு காலத்தில் சுதந்திரமாக சினிமா-துறை இயங்கி வந்தது. அதைபோல் அதிமுக ஆட்சியில் 2017-ல் இருந்து தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்கள் கோவாவில் நடைபெற்ற இண்டெர்நேஷனல் சர்வதேச திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் சூழ்நிலை இருந்தது.

அதைபோல் அதிமுக ஆட்சியில் திரைப்படத்துறை சர்வதேச அளவில் தரம் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன் மூவியை சுற்றி கண்படுகிறது.

திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார் அவரது கட்டுபாட்டில் தான் சினிமாத் துறை உள்ளது என்று திரையுலகமே இன்று குற்றம்சாட்டுகின்றது. சினிமா துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பதாக தெரியவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் திரைத்துறை அழிவு பாதையை நோக்கி செல்கின்றது என்று முன்னாள் செய்தி விளம்பரத்துறை கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!