கம கம கிராமத்து சமையல்: ஓலைப்பாயில் சம்மணமிட்டு ருசிபார்த்த ராகுல்..!!

30 January 2021, 9:27 am
raghul 3 - updatenews360
Quick Share

புதுக்கோட்டை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்த போது கிராமத்து சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூன்றுநாள் பயணமாக தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி ஐந்து மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். காரில் உட்கார்ந்து கொண்டு பரப்புரை செய்தது, டீக்கடையில் அனைவருடனும் சேர்ந்து டீ குடித்தது என அவர் பரப்புரையை பரபரப்பாக்கினார்.

சென்ற இடமெல்லாம் தமிழர்களின் கலாச்சாரம் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் ராகுல் பேசினார். தற்போது அதற்கும் மேலாக கிராமத்து மக்களுடன் இணைந்து அவர் சமைத்து சாப்பிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Village cooking channel எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவர்கள் காளான் பிரியாணி செய்தனர். அப்போது அங்கு சர்ப்ரைஸாக வந்த ராகுல் காந்தி, நானும் உங்களுக்கு உதவட்டுமா என கேட்டு, தயிருடன் வெங்காயம் கலந்து அவர்களுக்கு உதவி செய்தார்.

அவர்களுடன் சேர்ந்து ராகுல் அழகாக தமிழ் பேசினார். அதன்பின் ராகுல் அவர்களுடன் சேர்ந்து சமைத்து அசத்தினார். பிறகு அவர்களுடன் ஓலைப்பாயில் சம்மணமிட்டு அமர்ந்து ராகுல் காந்தி காளான் பிரியாணி சாப்பிட்டார். அவருடன் கரூர் எம்.பி ஜோதிமணி உடன் இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0