ராகுல்காந்தி கீழே விழுந்தது கபட நாடகம் – விளக்கம் தந்த தமிழக அமைச்சர்

Author: Aarthi
2 October 2020, 5:26 pm
rahul gandhi - updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி கீழே விழுந்தது சித்தரிக்கப்பட்டது போல இருக்கிறது என தமிழக அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.

விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராமசபை கூட்டத்தை நடத்துவார், கடையை திறப்பார் – அதற்கு முன் திமுக ஆட்சியில் நடைபெற்ற அக்கிரமம், விவசாயம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை மு.க.ஸ்டாலின் திரும்பி பார்க்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழக முதலமைச்சரின் முயற்சியால் தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழை கெடுப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகள் ஒருபோதும் பழிக்காது, அவரது முயற்சி காணல் நீராகத்தான் போகும் என்றும் ராஜேந்திர பாலாஜி சாடியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடியின் ஆட்சி தெளிவான ஆட்சி, பொலிவான ஆட்சி, வல்லமையான ஆட்சி, வலுவான ஆட்சி, சிறப்பான ஆட்சி என்று மக்களால் போற்றப்படும் ஆட்சி. இந்த ஆட்சி வில்லங்கம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி கீழே விழுந்த சம்பவம் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்ட சம்பவம் போல் தெரிகிறது. இதை வைத்து ஈனத் தனமான அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பு பிழைப்பை கெடுக்கும் என்றும் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

Views: - 46

0

0