திருப்பூருக்கு வருகை தரும் ராகுல்காந்தி : பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

23 January 2021, 11:39 am
Tirpur Rahul security - Updatenews360
Quick Share

திருப்பூர் : ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக கோவை மண்டபத்திற்கு வருகை தரும் ராகுல்காந்தி கோவையில் தொழில்துறையினருடனான சந்திப்பை முடித்த பின்பு திருப்பூர் மாநகரில் அனுப்பர்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து உரையாற்ற உள்ளார்.

பின்பு திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள குமரன் நினைவகம் சென்று திருப்பூர் குமரனுக்கு மரியாதை செலுத்தும் அவர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்

அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். திருப்பூரில் 800க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் 16 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 5

0

0