தமிழகத்தில் நிகழ இருந்த மிகப்பெரிய ரயில் விபத்து… ஹீரோவாக மாறிய ஊழியர்… உடனே நேரில் அழைத்து பாராட்டிய ரயில்வே நிர்வாகம்!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 12:32 pm
Quick Share

கொல்லம் – சென்னை விரைவு ரயில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், அதனை காப்பாற்றிய ஊழியருக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளது.

கேரளா – கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி தென்காசி வழியாக சென்ற கொல்லம் – சென்னை விரைவு ரயில் செங்கோட்டை ரயில்நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. அப்போது, வழக்கம் போல, ரயில் பெட்டிகளை ரயில் பெட்டி பராமரிப்பாளரான ரகுபதி என்பவர் சோதனை செய்தார்.

அப்போது, கொல்லம் – சென்னை விரைவு ரயிலின் எஸ் 3 பெட்டியின் அடிப்பாகத்தில் மிகப்பெரிய அளவிலான விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்து கூறியதால், மிகப்பெரிய அளவிலான விரிசலால் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டியில் இருந்த விரிசலை கண்டுபிடித்த ரயில்வே ஊழியர் ரகுபதியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருக்கு ரூ. 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாதுகாப்பு விருது வழங்கி கௌரவித்தார்.

ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான நிலையில் கொல்லம் ரயிலில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக கண்டறிந்ததன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருப்பது அனைவரிடத்திலும் பெருமூச்சை விடச் செய்துள்ளது.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 442

    0

    0