Rain Alert : கோவையில் பல்வேறு இடங்களில் கனமழை.. நாளையும் பெய்ய வாய்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2021, 2:05 pm
கோவை : கோவையின் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
கோவையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த மாதத்தில் இருந்து நீடித்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக கோவையில் மழை ஓய்ந்திருந்த நிலையில் இன்று மதியம் 1 மணி முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, உப்பிலிபாளையம், அவிநாசி ரோடு, அண்ணா சிலை, பாப்பநாயக்கன்பாளையம் கணபதி, சரவணம்பட்டி, டெஸ்டூல் பாலம், சித்தாபுதூர், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
மழை நாளையும் நீடிக்கலாம் என்று வானிலை ஆர்வலர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்தார்.
0
0