‘மக்கள் ஒன்னும் ஓசியில் பயணிக்கல’…பஸ்ஸுக்குள் பெய்யும் மழை… நின்று கொண்டே பயணிக்கும் மக்கள்.. புலம்பும் நடத்துநர்..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 5:00 pm
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு பஸ்சில் மேற்கூரையில் ஆங்கங்கே இருந்த ஓட்டையின் வழியாக மழைநீர் உள்ளே வந்தால் இருக்கை முழுவதும் நனைந்து பயணிகள் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு பசுவந்தனையில் இருந்து தினமும் இரவில் அரசு பஸ் ஒன்று வருவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல அந்த அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

இந்நிலையில் அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழைநீர் பஸ்சிற்குள் விழுந்துள்ளது. பஸ்சில் மழைநீர் விழுந்து இருக்கைகள் முழுவதும் நனைந்தால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அப்போது, அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய நடத்துநர், “மக்கள் யாரும் ஓசியில் வரவில்லை. பலமுறை சொல்லியும் மேற்கூரையில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,” என அந்த அரசு பஸ் நடத்துனர் புலம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 381

0

0